
சென்னை சேபாக்கத்தில் பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வைத்தார் திமுக பொதுச்செயலாளர் கனிமொழி, தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என தெரிவித்தார். ஒரு சிலர் ஆளுநர்களை முதலமைச்சர்கள் வம்புக்கு இழுப்பதாக தெரிவிக்கின்றனர், அது அவ்வாறு இல்லை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் தான் முதலமைச்சர்களை வீண்வம்புக்கு இழுக்கின்றனர்.
அதாவது தமிழ்நாடு என்ற பெயரானது பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணா வைத்த பெயர், எனவே இதனை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது என தெரிவித்த அவர், தமிழ் மக்களின் உணர்வானது மிகவும் ஆழமானது அதனை யாரும் சீண்டிப் பார்த்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்தார்.