லால் சலாம் படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

லால் சலாம் படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.

அப்போது பேசிய லால் சலாம் படத்தின் இயக்குனரும், ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி “என் அப்பாவை சங்கி என விமர்சிக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர் ஒரு சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். ஒரு சங்கியால் இந்த படம் பண்ண முடியாது. இந்த படத்தில் அவரை தவிர தைரியமாக யாருமே நடித்திருக்க முடியாது. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்த படம் உங்களைப் பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் கண்டிப்பாக சங்கி இல்லை” எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் இன்று மாலை படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமியர் வேடத்தில் மத நல்லினக்கத்தை வலியுறுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.