ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகை யார் தெரியுமா?

ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகை யார் தெரியுமா?

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் காலகட்டத்திலே பெயரெடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ் ,தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் ரஜினி ,கமல் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்தியில் இவர் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து அங்கும் சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்தார். இவர் பிரபல இந்தி பட தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து மறுமணம் செய்து கொண்டார். நடிகை ஸ்ரீதேவி இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தார். அதில் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் உள்ள ஹோட்டல்களில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இன்று வரை அவரது மரணத்திற்கான காரணம் என்னவென்று தெரியாமல் ஒரு வித புதிராகவே இருந்து வருகிறது. ஸ்ரீதேவி மறைந்து இத்தனை வருடங்கள் ஆகியும் கூட அவரை பற்றி பேசாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தமிழில் நேர்கொண்ட பார்வை வலிமை என அடுத்தடுத்து அஜித்தை வைத்து படங்களை தயாரித்து இங்கு தயாரிப்பாளராக முத்திரை பதித்தார்

காரணம் அஜித்தை வைத்து படம் இயக்குங்கள் என ஸ்ரீதேவி மரணிப்பதற்கு முன்பு சொல்லிவிட்டு சென்றார் அதை அவரது கணவர் செய்து முடித்தார். இந்நிலையில் ஸ்ரீதேவி குறித்த ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது இந்திய நடிகைகளில் முதன் முதலில் ரூ. 1கோடி சம்பளம் வாங்கியது நடிகை ஸ்ரீ தேவி தானாம். அந்த சமயத்தில் ரஜினி, கமல் கூட அவ்வளவு சம்பளம் வாங்கவில்லை.

நடிகையில் ஸ்ரீ தேவி தான் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியவர். அதே போல் நடிகர்களில் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது நடிகர் ராஜ்கிரண் தான். இன்று ரூ. 100 கோடி, ரூ. 150 கோடியில் சம்பளம் வாங்கி வரும் ரஜினி, கமல் அன்று ரூ. 1 கோடி சம்பளம் வாங்க பல வருடங்கள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.