
நடிகை திரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட்…..
தென்னிந்திய நடிகைகளில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் தான் திரிஷா. 1999 ல் “மிஸ் சென்னை” என்ற அழகி போட்டியில் வென்றார். 1999 ல் “ஜோடி” என்ற படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய துணை வேடத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து “லேசா லேசா” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் சூர்யாவுடன் இணைந்து “மௌனம் பேசியதே” என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து “வர்ஷம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதன் பின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தார். தற்போது பொன்னியன் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிப்பில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவ்வவ்போது சமூக வலைத்தளங்களில் தனது போட்டோக்களை பதிவுசெய்தும் வருகிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் 40 வயது கடந்தாலும் திரிஷா அப்படியே இருக்காங்கப்பா என்று கமெண்ட் செய்துள்ளனர்.




