
தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம்,மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் விஜய்,சூர்யா,விக்ரம், விஷால், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். விஜயுடன் இவர் நடித்த, கத்திதெறி,மெர்சல் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டானது விஜய்க்கு சமந்தா பெஸ்ட் காம்பினேஷன் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது தொடர்ந்து பாலிவுட்டிலும் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் அவர் நடித்த “யசோதா” படம் ஹிட் கொடுத்தது. மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியான இந்த படம் ரசிகர்களிடயே ஹிட் கொடுத்தது.
தற்போது நடிப்பில் பிஸியாக இருக்கும் சமந்தா சோசியல் மீடியாகளிலும் ஆக்டீவ்வாக இருக்கிறார். இந்நிலையில் லண்டனில் “சிட்டடெல்” வெப்சீரிஸின் பிரீமியர் ஷோவில் கலந்து கொண்டார். இந்த தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தாவான் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கின்றனர். தற்போது இன்ஸ்டாவில் சமந்தா வருணுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.




