சூரிக்கும் எனக்கும் உள்ள பிரச்சனைகள் சுமூகமாக முடிந்துவிட்டது

சூரிக்கும் எனக்கும் உள்ள பிரச்சனைகள் சுமூகமாக முடிந்துவிட்டது

நடிகர் சூரியை நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பேட்டி அளித்துள்ள விஷ்ணு விஷால் அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது என்று கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறிய போது சமீபத்தில் சூரியை நாங்கள் சந்தித்து அந்த பிரச்சினை பிரச்சினை குறித்து பேசினோம். அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துவிட்டது, விரைவில் உங்களுக்கு அதனை தெரிவிப்போம்.

இருவரும் சேர்ந்து பேசியபோதுதான் மூன்றாவது ஒரு நபர் இதில் விளையாடிவிட்டு எங்கள் இருவரையும் ஏமாற்றியது தெரிய வந்தது. அவரது தரப்பில் உள்ள இழப்பையும் எங்கள் தரப்பில் உள்ள நியாயத்தையும் நாங்கள் நேரில் பேசிய பிறகு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்

இந்த விஷயத்தில் எங்களுக்கு இடையே இருந்த குழப்பங்கள் தற்போது முழுமையாக நீங்கி விட்டது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று விஷ்ணு விஷால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிலம் வாங்கி தருவதாக 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா தன்னை ஏமாற்றியதாக சூரி கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.