டெல்லியில் நடந்த அதிர்ச்சி…. மொத்த குடும்பத்தையும் கொலை செய்த மகன்!!! – athirvu news

டெல்லியில் நடந்த அதிர்ச்சி…. மொத்த குடும்பத்தையும் கொலை செய்த மகன்!!!

கொலை

டெல்லியின் பாலம் பகுதியில் வசிக்கும் கேசவ் (26) என்பவரை போதைக்கு அடிமையாகிய காரணத்தினால் அவருடைய பெற்றோர் அவரை மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந் நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த கேசவ் மீண்டும் தனது திருவிளையாடலை ஆரம்பித்து அடிக்கடி தனது குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டும் வந்தார்.

இந்நிலையில் நேற்று போதையில் வீட்டுக்கு வந்த அவர் மது அருந்துவதற்கு பணம் தரும்படி கேட்டுள்ளார், அதனை பெற்றோர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமைடைந்த கேசவ் தனது தந்தை, தாய், சகோதரி மற்றும் பாட்டி ஆகிய நால்வரையும் குத்தி கொலை செய்தார். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு ஓடி வந்த அயலவர்கள் வீட்டில் குடும்பமே இரத்த வெள்ளத்தில் மிதப்பதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர், இதனையடுத்து தப்பியோட பார்த்த கேசவினை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப் பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

.

எந்த பீலிங்க்ஸும் வரல – ராதிகா ஆப்தே ஜொலிக்கும் உடையில் சொக்கி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா ஆசை கிளப்பும் அனுபமா மேலே இருந்து பார்க்க மெய்யாலுமே கிக்கு ஏறுது – பூனம் பாஜ்வா பிரியங்கா மோகனை பார்த்து வழியும் ரசிகர்கள் விஜே பார்வதியை விளாசும் நெட்டிசன்ஸ்