முழு காரணமும் அவர் தான்… விவாகரத்துக்கு பின் தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா!

முழு காரணமும் அவர் தான்… விவாகரத்துக்கு பின் தனுஷ் பற்றி பேசிய ஐஸ்வர்யா!

தமிழ் சினிமாவில் பிரபல இளமை இசையமைப்பாளரான அனிருத் ரவிசந்திரன் மிகவும் வயதிலேயே மியூசிக் டைரக்டராக சினிமாவில் அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அவரது திறமை வெகுசீக்கிரத்திலே மக்களின் மனதை கவர்ந்தது என்றே சொல்லலாம். ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவின் சித்தி மகன் ஆனது திசையின் ஆர்வத்தை மொத்த குடும்பமே அவரின் இசையையும் திறமையும் எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என்ற ஆர்வம் தனுஷ் இடம் நிறையவே இருந்தது.

குறிப்பாக தனுஷ் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தார். தனுஷின் திரைப்படங்களுக்கு அவரை இசையமைத்ததன் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் என்று சொல்லலாம். தொடர்ந்து ரஜினி கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு மெட்டு போட்டு அசத்திருக்கிறார். அது அனைவரையும் குத்தாட்டம் போட்டு நடனம் போடும் வகையில் அமைந்துவிடும். அந்த அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனது ரசிகர்களாக்கிகொண்டார்.

இந்நிலையில் தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் அனிருத்தின் புகழையும் அவர் இந்திய சினிமாவில் உச்சத்தில் மியூசிக் டைரக்டராக இருப்பது பற்றியும் கேள்வி கேட்டனர். அதுமட்டுமில்லாமல் நீங்கள் தான் சினிமாவில் அனிருத்தை அறிமுகப்படுத்தியவர். அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதற்கு தனுஷ் தான் காரணம் நான் இல்லை. அனிருத்திடம் இருக்கும் நிறைய திறமை தனுஷ் தான் கண்டுபிடித்தார்.

அனிருத் பெற்றோர்களை அவரை படிக்க வைக்க வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என திட்டமிட்டிருந்த சமயத்தில் தனுஷ் தான் அவர்களிடம் பேசி அனிருத்துக்கு இருக்கும் திறமை வெளிப்படுத்தி கூறினார். அனிருத்துக்கு கீபோர்ட் வாங்கி கொடுத்தார். தொடர்ந்து தன்னுடைய மூன்று படங்களை அனிருத்தை இசையமைப்பாளராக போட வேண்டும் என என்னிடம் கூறினார். எனவே ஒரு எந்த ஒரு பிரபலமும் ஆகாத அனிருத்தின் திறமையை தன்னுடைய படங்களின் மூலமாக மக்களுக்கு காட்டியது முழுக்க முழுக்க தனுஷ் தான் எனவே அனிருத்தின் வளர்ச்சிக்கு தனுஷ் மட்டுமே காரணம் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு தனுஷை பற்றி மிகவும் பெருமையாக பேசி அனிருத்தின் வளர்ச்சியை பற்றி கூறினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.கணவரை பிரிந்த பின்னரும் கணவரை பற்றி இந்த அளவுக்கு பெருமையாக பேசும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து அவருக்கு பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

.