லண்டனில் பரபரப்பு ! .. 34 சடலங்களை வெளியே எடுத்த பொலிசார் பெரும் குழப்பம் !

லண்டனில் பரபரப்பு ! .. 34 சடலங்களை வெளியே எடுத்த பொலிசார் பெரும் குழப்பம் !

பிரித்தானியாவில் ஹல்(HULL) நகரில் உள்ள, ஈமைக் கிரிகைகள் நடத்தும் நிறுவனத்தினுள் புகுந்த பொலிசார் அங்கிருந்த 34 சடங்களை அப்புறப்படுத்தி வைத்தியசாலைக்கு மீண்டும் அனுப்பியுள்ள விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் இந்த நிறுவனம், இறந்தவர்களின் சடலங்களை எரித்துவிட்டு, பிழையான குடும்பத்திற்கு அஸ்தியைக் கொடுத்து வந்துள்ளார்கள். இதனால் பல ஆசிய இனத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பான HULL நகரில் பல தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த ஈமைக் கிரிகைகளை நடத்தும் நிறுவனம், பெரும் தொகைப் பணத்தை வாங்கிக் கொண்டு ஈமைக் கிரிமைகளை நடத்திவிட்டு. இறுதியாக அஸ்தியைக் கொடுக்கும் வேளை, வேறு நபர்களின் அஸ்தியை, சம்பந்தமே இல்லாத குடும்பத்திற்கு பல முறை கொடுத்துள்ளது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில்.  கடந்த வாரம் மட்டும் 350 தொலைபேசி அழைப்புகள் தமக்கு கிடைக்கப் பெற்றதாகவும். கடந்த புதன் கிழமை(06) நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சி தரும் வண்ணம் உள்ளதாக Humberside Police தெரிவித்துள்ளார்கள். Humberside Police:  later arrested two people on suspicion of fraud and preventing a decent burial. Some 34 bodies were also confirmed to have been removed from one of the funeral homes in the Hessle Road area of the city.

இதனை அடுத்து இன்று(13)  லெகஸி(Legacy) என்ற இந்த நிறுவனத்தை முற்றுகையிட்ட பொலிசார் அங்கே இருந்த 34 சடலங்களை உடனடியாக அப்புறப்படுத்தி. ஈமைக் கிரிகைகள் நடப்பதை தற்காலிகமாக தடைசெய்துள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. இதில் கவலையான விடையம் என்னவென்றால், பலர் பிழையான அஸ்தியை எடுத்துச் சென்று, கடலில் கரைத்துள்ளார்கள் என்பது தான். தமது உறவுகள் என நினைத்து, அஸ்தியை வைத்து ஈமைக் கிரிகைகள் செய்துள்ளார்கள். ஆனால் கடைசியில் பார்த்தால், அது அவர்களின் உறவினர்கள் அல்ல என்பது தெரியவரும்போது, வேதனை தான் மிஞ்சியுள்ளது.