முல்லைதீவை அதிரவைத்த திருடர்கள்… பிடிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம்!!!!

Spread the love
திருடர்கள்

மிக நீண்ட நாட்களாக முல்லைத்தீவு மக்களை ஆட்டிப்படைத்த திருடர் குழுக்கள் வசமாக மாட்டினார்கள். அதாவது இரவு நேரங்களில் வீடுகளில் புகுந்து நகை மற்றும் பெருமளவான பணத்தினை கொள்ளையடித்து வந்தன இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர் இந்நிலையில் ஊர் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து திருடர்களை பிடிப்பதற்கு தயாரா இருந்தனர்.

இந்நிலையில் குறித்த திருட்டுக் குழுவினைச் சேர்ந்த 05 பேர் நகரில் அமைந்துள்ள ஒருவரின்த வீட்டில் திருடுவதற்காக நுழைந்துள்ளனர், இதனைக் கண்டு குறித்த வீட்டுக்காரர்கள் சத்தம் எழுப்பிய நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த இளைஞர்கள் குறித்த திருடர்களில் 03 பேரை மடக்கிப்பிடித்து சேம அடி கொடுத்து கட்டிவைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அதேசமயம் தப்பியோடிய இருவரில் ஒருவரை ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து தேடி பிடித்து சக்க அடிபோட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவாறான திருட்டு செயலில் ஈடுபட்டவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளதுடன் இவர்களுக்கு எதீராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்திடமும், சட்டத்தரனிகளிடமும் மக்கள் கேட்டுக் கொன்டனர்.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.