விஜய் கூட நடிக்க பிடிக்கல? “மெர்சல்” படத்தை நிராகரித்ததற்கு காரணம் இதுதான்!

மெர்சல்

மும்பையில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் வந்து இங்கு மிகப்பெரிய நடிகையாக அந்தஸ்தை பிடித்தவர் நடிகை ஜோதிகா. இவர் ஹிந்தி மொழியை கற்று தெரிந்து தமிழ் கூட தெரியாமல் தமிழ் சினிமாவுக்கு வந்து இங்கு நட்சத்திர நடிகையாக ஜொலித்தார்.

தமிழிற்கு தாண்டி தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் அதிகம் நடித்திருக்கிறார் குறிப்பாக இந்தி மொழி படங்களில் இவர் மிகுந்த ஆர்வம் காட்டி நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் இவரை இவரை முழுமையாக மனதோடு ஏற்றுக்கொண்டார்கள்.

வாலி நடித்த வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் அதன் பின்னர் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்துபல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் ஜோதிகா.இதனிடையே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா சில ஆண்டுகள் சினிமா பக்கமே வா தலை காட்டாமல் இருந்தார். பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிசை தொடங்கி தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் மெர்சல் படத்தை நிராகரித்ததன் காரணம் என்ன என கேட்டதற்கு… அந்த படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதனால் சில காட்சிகளை மாற்றியமைக்க சொல்லி கேட்டேன். ஆனால் அவர்கள் தரப்பு அது முடியாது என கூறி விட்டார்கள்.

ஹீரோயிசம் மட்டும் படத்தில் முக்கியமாக காட்டும் திரைப்படங்களில் நடிக்க எனக்கு பெரிதாக விருப்பமில்லை என கூறினார். இதன் மூலம் அவர் நடிகர் விஜய் மட்டும் பெரிதாக காட்டாமல் என்னையும் கொஞ்சம் திரையில் காட்ட வேண்டும் என்பதை வெளிப்படையாக கூறி இருக்கிறார். இதுதான் அந்த படத்தில் நடிக்காததற்கு காரணம் என ஜோதிகா தெளிவாக கூறிவிட்டார்.