திமுகவை தேர்தலில் வெற்றிகொள்ள….. அதிமுகவின் திட்டம்… சசிகலாவின் அதிரடியான பேச்சு!!!

இந்த செய்தியை பகிர

அதிமுக தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஆபுசு இன் 106 பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது, இதனையிட்டு ஆபுசு இன் திருவுருவப் படத்திற்கு சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார், அதன்பின்னர் கருத்துத் தெரிவித்த அவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வெற்றிகொள்ள வேண்டுமானால் அதிமுக ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே முடியும் எனத் தெரிவித்தார். இது தொடர்பாக விரைவில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இவ்வாறானவொரு கீழ்த்தரமான செயற்பாடு நடைபெறவில்லை எனவும் கவர்னரை எப்படி நடாத்த வேண்டும் என்ற ஒரு நியதி உள்ளதாகவும். அதற்கமைய தமிழக கவர்னரை நடாத்த வேண்டும் எனவும், தேவை இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் சண்டை போடுவதனை நிறுத்திவிட்டு வாக்களித்த மக்களுக்கு என்ன தேவை என்பதனை அறிந்து செயற்படுமாறு தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை பகிர