அப்படி ஓரமா போமா… அந்த விஷயத்தில் நயனதாராவை ஓவர்டேக் செய்த திரிஷா!

அப்படி ஓரமா போமா… அந்த விஷயத்தில் நயனதாராவை ஓவர்டேக் செய்த திரிஷா!

கோலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் திரிஷா. இவர் முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது . 1999 ஆம் ஆண்டில் ஜோடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மௌனம் பேசியதே, சாமி, அலை, கில்லி, ஆயுத எழுத்து, நந்தா , ஆறு , பீமா அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு, மங்காத்தா, பூலோகம், கொடி, மோகினி, பேட்ட, இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் கமலுக்கு ஜோடியாக thuglife திரைப்படத்திலும் நடித்த வருகிறார். இந்நிலையில் நடிகை திரிஷாவின் கமலின் தக் லைப் படத்திற்காக 12 கோடி ருபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இதன் மூலமாக நயன்தாராவை ஓரங்கட்டி டாப் ஹீரோயின் என்ற இடத்தை பிடித்து இருக்கிறார் திரிஷா.