சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கும் திரிஷா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.

இதையடுத்து, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் படத்தில் திரிஷா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.