சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை… அதனால்தான் VTK 2 தாமதம்- கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

சிம்புவுக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சனை… அதனால்தான் VTK 2 தாமதம்- கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 2022 ஆம் தேதி சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. இது கௌதம் மேனன் சிம்பு கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக உருவானது.

படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தும் ரிலீஸுக்குப் பிறகு கலவையான விமர்சனங்களையேப் பெற்றது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகும் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு 2 படம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “நானும் ஜெயமோகனும் இணைந்து கதையை முடித்துவிட்டோம். ஆனால் இடையில் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக தாமதம் ஆகிறது. பிரச்சனை முடிந்ததும் அந்த படம் தொடங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.