
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒருவருட காலமாகப் போர் தொடுத்து வருவதன் காரணமாக இருதரப்புக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட சில ஜரோப்பிய நாடுகள் தேவையான இராணுவ உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றது.
இந்நிலையில் ஜெர்மனிக்குச் சென்ற அமெரிக்க துணை ஜனாதிபதி அங்கு விசேட உரையாற்றினார், இதன்போது கருத்து தெரிவித்த அவர் ரஷ்ய இராணுவம் பொதுமக்கள்மீது கொலை, பாலியல் பலாத்காரம், அடித்துத் துன்புறுத்தல், மின்சாரம் பாச்சுதல் போன்ற மிலேசத்தனமான தாக்குதலினை மேற்கொண்டு வருவதாகவும், உக்ரைன் மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.