பிரித்தானியாவில் மீண்டும் முகக் கவசம் அணிவது நடைமுறைக்கு வர உள்ளது. புது வைரஸ் தாக்கம் பிரித்தானியாவில் பன்மடங்காக அதிகமாகியுள்ளது. சிறுவர்களை தாக்கும் வைரஸ் மற்றும் சீனாவை தாக்கியுள்ள புதுவகை கொரோனா என்று, 2 புதிய வைரஸ் பிரித்தானியாவில் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் வைத்தியசாலைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என NHS தெரிவித்துள்ளது.
சீனாவில் மிகக் கொடூரமாக கொரோனா பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இது போன்ற ஒரு நிலை பிரித்தானியாவில் வரக் கூடும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.