ஆயுள்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில்….. உல்லாசமாக இயங்கி வந்த விபச்சாரவிடுதி!!!

இந்த செய்தியை பகிர

கண்டி பிரதேசத்தில் மிக நீண்டகாலமாக மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியினை பொலிஸார் முற்றுகையிட்டு அதில் இருந்த மூன்றுபேரினை அதிரடியாக கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டியில் உள்ள பிரபல்ய அரசியல் வாதியின் அதிகாரத்தினை பயன்படுத்தி இவ் விபச்சார விடுதி இயங்கி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது தம்புத்தேகம பிரதேசத்தினைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் நடாத்தப்பட்ட விசாரணையில் இவரது பின்னனியில் பல இடங்களில் இவ்வாறான விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை பகிர