24 மணி நேரத்தில் மனிதரைக் கொல்லும் IMD-பக்ரீரியா லண்டனில் – குடிக்கும் தண்ணீரில் வேறு பிரச்சனை

24 மணி நேரத்தில் மனிதரைக் கொல்லும் IMD-பக்ரீரியா லண்டனில் – குடிக்கும் தண்ணீரில் வேறு பிரச்சனை

கொரோனா வைரசை விட 50 மடங்கு படு பயங்கரமான பக்ரீரியா தொற்று, லண்டனில் 3 பேருக்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. Invasive Meningococcal Disease என்று அழைக்கப்படும் இந்த பக்ரீயா(IMD) தொற்று சவுதி அரேபியாவில் அதிக அளவில் காணப்படுகிறது. சவுதியில் இருந்து லண்டன் திரும்பிய 3 பேருக்கு இந்த பக்ரீரியா தொற்று இருப்பதை, மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள். குறித்த பக்ரீரியா தாக்கினால், 24 மணி நேரத்தில் மனிதர் இறக்க வாய்ப்புகள் உள்ளது.

கொரோனா வைரஸ் என்றால் கூட 14 நாட்களுக்கு மேல் செல்லும். ஆனால் அதனை விடக் கொடூரமான இந்த பக்ரீயாவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே லண்டனில் குடி தண்ணீரை சுத்தம் செய்யும் தேம்ஸ் வாட்டர் நிறுவனம் பல ஆயிரம் கன அடி நீரை சுத்தம் செய்யாமலே மக்களுக்கு வினியோகித்து விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் அந்த குடி தண்ணீரில் ஒருவகையான வைரஸ் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பீதீ அடங்கும் முன்னர் , தற்போது சவுதி பக்ரீரியாவின் பீதி கிளம்பியுள்ளது. பொதுவாக வெக்கை காலத்தில் தான் பக்ரீரியா வைரஸ் போன்ற கிருமிகளின் தொற்று அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் தமிழர்களே ஹாலிடே என்று சென்று, தொற்று நோய்களை வாங்கவேண்டாம். மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

Source: https://www.mirror.co.uk/news/health/urgent-alert-issued-disease-can-32860082