லண்டனில் விடுக்கப்படும் எச்சரிக்கை ! 130 இடங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் !

லண்டனில் விடுக்கப்படும் எச்சரிக்கை ! 130 இடங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் !

லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் கடும் எச்சரிக்கை ஒன்றை, சற்று முன்னர் விடுத்துள்ளார்கள். லண்டனில் பரவலாக பல இடங்களில் தொடர் மழை பெய்ய உள்ளது என்றும். சுமார் 130 இடங்களில் வெள்ள ஆபத்து இருப்பதோடு பல சாலைகள் மற்றும், சிறிய வீதிகளில் வெள்ளம் தங்க நேரிடும் என்று பொலிசார் எச்சரித்துள்ளார்கள். இதனால் வாகனம் ஓட்டும் சாரதிகள் தொடக்கம் நடைபாதை பயணிகள் வரை, ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக M25 பகுதிக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் கனத்த தொடர் மழை காணப்படும் என்றும். இது வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஏற்கனவே கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால், பல இடங்களில் வெள்ளம் தேங்கி நிற்க்கும் நிலையில். மேலதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.