வாரிசு பாடல்களுக்கு அமோக வரவேர்ப்பு…. 100 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது!!!

இந்த செய்தியை பகிர

வாரிசு

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்திலும் தமன் இசையமைப்பிலும் விஜய், ராஷ்மிகா இணைந்து நடிக்கும் “வாரிசு” படத்தில் இரண்டு மெகா கிட்டான பாடல்கள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பினை பெற்றுள்ளது. இப்பாடல்களானது தீப் பொறி பறக்கும் விதத்தில் அதிரடியாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, “ரஞ்சிதமே” பாடலை மாத்திரம் இதுவரையில் 85 மில்லியன் ரசிகர்களும் நேற்று வெளியான “தீ தளபதி” பாடலை 11 மில்லியன் ரசிகர்களும் பார்வையிட்டு உள்ளதனால் படத்திற்கு அமோக வரவேர்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் தமன் விஜய் படத்திற்கு முதல் முதலாக இசையமைப்பதனால் வெளியாகிள இரண்டு பாடல்களிலும் அந்த நம்பிக்கையினை காப்பாற்றியுள்ளார் தமன். அதேபோல் நடிகர் சிம்பு முதலாவது தடவையாக விஜய் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளதால், சிம்பு ரசிகர்களும் இணைந்து கொன்டாடி வருகின்றார்கள்.


இந்த செய்தியை பகிர