என்னை எல்லாரும் அதற்காக தான் கூப்பிடுறாங்க – பகீர் கிளப்பிய வரலக்ஷ்மி!

என்னை எல்லாரும் அதற்காக தான் கூப்பிடுறாங்க – பகீர் கிளப்பிய வரலக்ஷ்மி!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தன்னுடைய அப்பா என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. வாரிசு நடிகை என்ற அடையாளத்துடன் இவர் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தனது திறமையால் தொடர்ந்து ஒரு முக்கிய இடத்தில் இருந்து வருகிறார். தனது திறமையால் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து ஒவ்வொரு படத்திற்கும் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைத்தவர் நடிகை வரலட்சுமி.

2012ம் ஆண்டு போடாபோடி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சிம்புவுடன் ஜோடி போட்டு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அப்படத்தில் வரலட்சுமியின் நடனம், நடிப்பு உள்ளிட்டவரை ஒரு அறிமுக நடிகை என்பதே நம்பமுடியாத அளவிற்கு அவ்வளவு சிறப்பாக பிரம்மிக்க வைத்தது.

அந்த படத்தை தொடர்ந்து சண்டக்கோழி, கொன்றால் பாவம், மாரி 2, சர்க்கார், விக்ரம் வேதா, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தரை தப்பட்டை திரைப்படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லலாம். அவரது திறமையான நடிப்பின் மூலம் தொடர்ந்து கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இதனிடையே வரலட்சுமி நடிகர் விஷாலை காதலித்தார். ஆனால், விஷால் திருமணம் செய்துக்கொள்ளாமல் தொடர்ந்து காலம் தாழ்த்திக்கொண்டு சென்றதால் அவரை பிரிந்துவிட்டார். சில ஆண்டுகள் கழித்து தற்போது வரலக்ஷ்மி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கேலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வரலக்ஷ்மி, நான் கிட்டதட்ட 10 பேட்டிகளில் சொல்லியிருப்பேன். யாராச்சும் எனக்கு இன்னேசென்ட் ஆன ரோல் கொடுங்க. ஒரு காமிக்கலான படத்தை கொடுங்க. ஒரு காமெடி படமா கதை சொல்லுங்க. அந்த மாதிரி படம் கொடுங்கன்னு தான் கேட்குறேன். ஆனால், வரவங்க எல்லாரும் 10 பேரை அடிங்க, வில்லி வெட்டுங்க இப்படித்தான் எனக்கு கதை சொல்லுறாங்க என பேட்டியில் கூறியுள்ளார் வரலக்ஷ்மி. இதோ அந்த வீடியோ: