நான் இரண்டாம் தாரமா…? மோசமான விமர்சனத்திற்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி!

நான் இரண்டாம் தாரமா…? மோசமான விமர்சனத்திற்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தன்னுடைய அப்பா என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. வாரிசு நடிகை என்ற அடையாளத்துடன் இவர் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தனது திறமையால் தொடர்ந்து ஒரு முக்கிய இடத்தில் இருந்து வருகிறார். தனது திறமையால் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து ஒவ்வொரு படத்திற்கும் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தி வியக்க வைத்தவர் நடிகை வரலட்சுமி.

2012ம் ஆண்டு போடாபோடி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சிம்புவுடன் ஜோடி போட்டு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். அப்படத்தில் வரலட்சுமியின் நடனம், நடிப்பு உள்ளிட்டவரை ஒரு அறிமுக நடிகை என்பதே நம்பமுடியாத அளவிற்கு அவ்வளவு சிறப்பாக பிரம்மிக்க வைத்தது.

அந்த படத்தை தொடர்ந்து சண்டக்கோழி, கொன்றால் பாவம், மாரி 2, சர்க்கார், விக்ரம் வேதா, தாரை தப்பட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தரை தப்பட்டை திரைப்படத்தில் வரலட்சுமியின் நடிப்பு பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லலாம். அவரது திறமையான நடிப்பின் மூலம் தொடர்ந்து கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இதனிடையே வரலட்சுமி நடிகர் விஷாலை காதலித்தார். ஆனால், விஷால் திருமணம் செய்துக்கொள்ளாமல் தொடர்ந்து காலம் தாழ்த்திக்கொண்டு சென்றதால் அவரை பிரிந்துவிட்டார். சில ஆண்டுகள் கழித்து தற்போது வரலக்ஷ்மி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கேலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டுள்ளார். ஆனால், பல வருடங்களுக்கு முன்பே கவிதா என்ற மாடல் அழகியை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டாராம். இந்த தம்பதியருக்கு 15 வயதில் மகளும் இருக்கிறார்.

இப்படியான நேரத்தில் வரலட்சுமியை பலர் மோசமாக விமர்சித்துள்ளனர். காரணம், 43 வயதானவருக்கு இரண்டாம் தரமாக போவது ஏன்? என பலர் கேள்விகள் கேட்டு ட்ரோல் செய்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வரலக்ஷ்மி, மற்றவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்று நான் எப்பவும் கவலைப்படமாட்டேன் என்றும் இப்படித்தான் பெண்கள் எப்பவும் மற்றவர்கள் பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், உங்களுக்காக வாழுங்கள். நீ இதை செய்யாதே அதை செய்யாதே என்று சொல்கிறவர்கள் யாரும் உங்கள் வாழ்க்கை முழுதும் பயணிக்க மாட்டார்கள் எனவும் நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு துணையாக நிற்கப்போகிறீர்கள். அதனால் என்ன தோன்றுகிறதோ அதை நீங்கள் செய்யுங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். வரலட்சுமியின் இந்த கருத்திற்கு பலர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்