விஜய் படம் ஓட முன்னரே 295 கோடியை கொட்டிக் குவித்தது: வாரிசு பட பிசினஸ் ரிப்போட் இதுதான்

Spread the love
வாரிசு

விஜய் நடித்த வாரிசு படம் பொங்கல் அன்று வெளியாக உள்ள நிலையில், அந்தப் படம் தற்போது 295 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தமிழ் நாடு, கேரளா, டெல்லி மற்றும் சாட்டலைட் உரிமை, OTT உரிமை உலக வெளியிட்டு உரிமை என்று நான் நீ என்று போட்டி போட்டி படத்தின் உரிமையை பல கம்பெனிகள் வாங்கியுள்ளது. இதன் மொத்த வருமானமே 295 கோடியை எட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தை தயாரித்த தில்ராஜ் இதுவரை 260 கோடியை மட்டுமே செலவு செய்த நிலையில். அவருக்கு தற்போது 35 கோடி லாபமாக கிடைத்துள்ளது. அது போக கன்னடத்தில் தில்ராஜ் அவர்களே வாரிசு படத்தை வெளியிடுகிறார். இதனூடாக அவருக்கு மேலும் 50 கோடி லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு தமிழ் நடிகரான விஜயை வைத்து படம் எடுத்தால் 85 கோடி லாபம் பார்கலாம் என்பது, பெரிய விடையம் தான்.

தமிழ் நாட்டில் பெரிய அளவில், தியேட்டர்களை ஒதுக்கியுள்ளது தில்ராஜ் குழுமம். இதனூடாக தமிழ் நாட்டில் 7 நாட்கள் மட்டும் படம் ஓடினால் போதும். பல கோடிகள் குவிந்து விடும் எகிறார்கள்.