
நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் போட்டோஷுட்ஸ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியாமணி. ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அது ஒரு கனா காலம், பருத்தி வீரன், மது, மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தலே இனிக்கும், சாருலதா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருதினை பெற்றார். அதன் பின் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். பல டிவிகளில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்ற பிரியாமணி குறும்படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். இந்நிலையில் சேரியில் அழகாக போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுக்கிறார்.


