தாமு உடன் பேச்சுவார்த்தை இல்லை – வெங்கடேஷ் பட் ஷாக்கிங் பேட்டி!

தாமு உடன் பேச்சுவார்த்தை இல்லை – வெங்கடேஷ் பட் ஷாக்கிங் பேட்டி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த சீசன் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்து அண்மையில் ஐந்தாம் சீசன் தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்த சோவில் நடுவராக இதற்கு முன் வரை இருந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.

அதுவே குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியாகவும் இடி விழுந்தது போலும் ஆகிவிட்டது. அவருக்கு வேறு ஏதாவது புது நிகழ்ச்சி கிடைத்து விட்டதா? அல்லது வேற ஏதாவது சேனல்களில் அதிக பணத்திற்காக ஆசைப்பட்டு சென்று விட்டாரா என்றெல்லாம் விதவிதமான கதைகள் வெளியாகி செய்தியாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெங்கடேஷ் பட் அளித்த பேட்டியில் தான் ” எனக்கு விஜய் டிவி பிடிக்காததால் விலகிவிட்டேன். குக் வித் கோமாளி தொடங்கியபோது விஜய் டிவி என்னை மட்டும் தான் நடுவராக இருக்க சொன்னார்கள், ஆனால் நான் தான் செஃப் தாமுவும் வேண்டும் என விஜய் டிவியை கட்டாயப்படுத்தி அவரையும் நடுவராக கொண்டு வந்தேன். ஆனால், விலகுவதாக அறிவித்தபிறகு விஜய் டிவி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கு ஒப்புக்கொண்டு தான் தாமு தனது முடிவை மாற்றிக்கொண்டிருக்கிறார். அந்த சம்பவத்திற்கு பிறகு செஃப் தாமு உடன் பேசவில்லை. அவர் வாக்கு மாறினாலும், நட்பு மாறாது” என கூறி இருக்கிறார்.