“வேட்டையன்” 75% ஷூட் ஓவர்…விரைவில் ரிலீஸ் – ரஜினி கொடுத்த அப்டேட்!

“வேட்டையன்” 75% ஷூட் ஓவர்…விரைவில் ரிலீஸ் – ரஜினி கொடுத்த அப்டேட்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் தோல்வியை அடைந்து விட்டது. அடுத்ததாக டிஜே ஞானவேல் இலக்கத்தில் வேட்டையன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் டி ஜே ஞானவேல் இயக்கி வருகிறார் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ஒரு ஷூட்டிங் ஷெடியூல் இந்த மாதத்திற்குள் நிறைவடைய திட்டமிட்டு அதற்கான வேலைகள் கட்சிதமாக செய்து வருவதாக டிஜே ஞானவேல் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் சூட்டிங் 75% நிறைவடைந்துள்ளதாகவும் படத்தின் சூட்டிங் முழுமையாக நிறைவடைந்த உடன் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.
அடுத்த படமான தலைவர் 171 படத்தில் வேலைகள் துவங்கப்பட்டுள்ளதா? என கேள்வி கேட்டதற்கு இன்னும் துவங்கப்படவில்லை என ரஜினிகாந்த் திட்டவட்டமாக பதில் அளித்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்ததாக ஹைதராபாத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் 75% நிறைவடைந்த நிலையில் ஐதராபாத்தில் படத்தின் மீது உள்ள காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும் இந்த மாதத்திற்குள் படத்தை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் கூறுகிறது.

இதை அடுத்து படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம். லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் திசை அமைத்து வருகிறார். படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.