அஜித் போல் காஸ்ட்லீயான பைக் வாங்கிய “விடாமுயற்சி” நடிகர் – விலை எவ்வளவு தெரியுமா?

அஜித் போல் காஸ்ட்லீயான பைக் வாங்கிய “விடாமுயற்சி” நடிகர் – விலை எவ்வளவு தெரியுமா?

மாடல் அழகனாக பல்வேறு விளம்பர படங்கள் நடித்து அதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றவர் ஆரவ். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த மிகப்பெரிய மார்க்கெட் வைத்து திரைப்படங்களிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. ராஜா மற்றும் ராஜபீமா போன்ற படங்களில் ஆரவ் நடித்து வந்தார்.

அத்துடன் இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்த கழகத்தலைவன் படத்தில் கூட வில்லனாக நடித்து அசத்திருந்தார். அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆரவ் ரோல் மிகப்பெரிய அளவில் பேசும்படியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தபோது ஓவியாவுடன் காதல் வழங்கப்பட்டு மருத்துவ முத்தம் கொடுத்ததெல்லாம் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்பட்டு வந்தது. ஓவியா ஆரவ்வை உயிர் குறைவாக காதலித்து தற்கொலை முயற்சி அளவுக்கு சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் இருவரும் நடந்துக்கொண்டனர் .

இதையடுத்து ஆரவ் கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை ராஹீ என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரஹீ இமைப்போல் காக்க படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது ஆரவ் – ரஹீ ஜோடிக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

ஆரவ் தற்போது விடாமுயற்சி படத்தின் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது அஜித் உடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் சூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் தற்போது சமீப காலமாக அஜித்துடன் சேர்ந்து பைக் ரேஸ் சென்று அவருடன் எடுத்துக்கொள்ளும் போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்.

இந்நிலையில் ஆரவ் தறபோது அஜித்தை போன்றே மிகவும் காஸ்ட்லியான பைப் ஒன்றை வாங்கி அது சமூக வலைதளத்தில் வெளியிட அந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது. riumph Tiger 1200 என்ற அந்த பைக் 1160 சிசி திறன் கொண்டது.அதன் விலை ரூ. 22.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.