என்ன மனுஷன்ய்யா நீ…. மனைவியின் Ex -காதலரை உருக்கமாகப் பாராட்டிய விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கும் போது நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலித்து வந்துள்ளார்.

ஆனால், முதலில் காதலை சொன்னது என்னவோ நயன்தாரா தானாம். அவரின் கண்ணியமான குணமும் ஒரு இயக்குனராக நல்ல திறமையும் பார்த்து நயன்தாராவுக்கு மிகவும் பிடித்து போக அவர் மீது காதலில் விழ ஆரம்பித்துவிட்டாராம்?

உடனே விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டார். இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார் நடிகை நயன்தாரா.

தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்கள் இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனும் படங்களை இயக்குவது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேச்சு ஒன்றில் நயன்தாராவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்புவை வெகுவாக பாராட்டி புகழ்ந்துள்ளார் விக்னேஷ் சிவன் .

முதன் முதலில் சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். அந்த படத்தை இயக்கும்போது போது இயக்குனராக மட்டுமில்லாமல், அந்த படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்களை விக்னேஷ் தான் எழுதியிருந்தார்.

அந்த சமயத்தில் விக்னேஷ் சிவனை ஒரு எழுத்தாளராக உருவாக்கியது சிம்பு தானாம். அவர் மட்டும் இல்லை என்றால் இன்று நான் சிறந்த பாடலாசிரியராக இருக்க முடியாது. அவர்தான் எனக்கு நிறைய ஊக்கமளித்து எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார் என சிம்புவை பற்றி உருக்கமாக பேசியுள்ளார் இயக்குனர் விக்னேஷ். என்னதான் மனைவியின் முன்னாள் காதலனாக இருந்தாலும் அவரின் நன்றியை மறவாத விக்னேஷ் சிவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.