ஏன் சரக்கு அடிச்சீங்க… மிருணாளினி ரவியை மிரட்டிய விஜய் ஆண்டனி!

ஏன் சரக்கு அடிச்சீங்க… மிருணாளினி ரவியை மிரட்டிய விஜய் ஆண்டனி!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து அதன் பின்னர் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் தான் விஜய் ஆண்டனி இவர் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது விஜய் ஆண்டனி ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மிருணாளினி ரவி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ரோமியோ படத்தின் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதாவது முதலிரவில் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினி இருக்கும் வகையான இந்த போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படக்குழு கலந்துக்கொண்டது. அப்போது விஜய் ஆன்டனியிடம் இந்த சர்ச்சையான பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

விஜய் ஆண்டனி இதற்கு சர்ச்சையாக பதில் அளித்துள்ளது தான் பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அதாவது ரோமியோ படத்தில் நடிகை மிருணாளினி சரக்கு அடிப்பது போல் போஸ்டர் போட்டிருக்கிறார்களே இது நியாயமா? இப்படி செய்யலாமா? சரக்கடிப்பதை ஆதரிக்கிறீர்களா? என பத்திரிகையாளர் விஜய் ஆண்டனி பார்த்து கேட்க…. ஐயோ சார் நான் அடிக்கல….இவங்கதான் என்று ஹீரோயினை கோர்த்துவிட்டு பத்திரிகையாளர் கேட்டதை போலவே ஏன் குடிச்சீங்க என மிருணாளினியை மிரட்டினார் விஜய் ஆண்டனி. உடனே அவருக்கு என்ன பதில் சொல்வேன் என்றதே தெரியாமல் திருதிருவென முழித்தார் மிருணாளினி.

உடனே அரங்கமே கலகலப்பானது. பின்னர் தெளிவான பதில் அளித்த விஜய் ஆண்டனி…. “ஆண்கள் மட்டும் தான் குடிக்க வேண்டுமா? குடிப்பது என்பது தப்பு என்றால் இருவரும் செய்வதும் தப்புதான். அதை பெண்கள் செய்யக்கூடாது என குறிப்பிட்டு சொல்வது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது என கூறினார். பின்னர் ஜீசஸ் அந்த காலத்திலே குடிக்கலயா? திராட்சை ரசம், சோம பானம் என அப்போவே மது இருந்தது எல்லாம் வரலாறு சொல்லுகிறதே சர்ச்சையாக பேசினார். தன்னுடைய படத்தின் ப்ரோமோஷன்காக விஜய் ஆண்டனி இயேசு சுவாமியை இப்படி இழுத்து சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.