இயேசுவை பற்றி சர்ச்சையாக பேசினேனா? பதறிப்போய் விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி!

இயேசுவை பற்றி சர்ச்சையாக பேசினேனா? பதறிப்போய் விளக்கம் அளித்த விஜய் ஆண்டனி!

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி முதலில் மியூசிக் டைரக்டராக இருந்து அதன் பின்னர் ஹீரோவானார். 2005 இல் இசையமைப்பாளராக அறிமுகமானார். நான், சலீம்,பிச்சைக்காரன் போன்ற அதிரடி திரில்லர் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

விஜய் ஆண்டனியை பாத்திமா என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீரா மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த அடுத்த ஒரு வாரத்தில் இருந்தே படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் விஜய் ஆன்டனி தற்போது ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மிருணாளினி ரவி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ரோமியோ படத்தின் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதில் முதலிரவில் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினி இருக்கும் அந்த போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. நேற்று இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்டார்.

அப்போது மதுகுடிப்பதை உங்கள் படத்தில் ஆதரிக்கிறீர்களா? இந்த போஸ்டர் சர்ச்சைக்குரியதாக உள்ளது நியாமா என கேட்டதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, “ஆண்கள் மட்டும் தான் குடிக்க வேண்டுமா? குடிப்பது என்பது தப்பு என்றால் இருவரும் செய்வதும் தப்புதான்.

அதை பெண்கள் செய்யக்கூடாது என குறிப்பிட்டு சொல்வது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது என கூறினார். பின்னர் ஜீசஸ் அந்த காலத்திலே குடிக்கலயா? திராட்சை ரசம், சோம பானம் என அப்போவே ஏசு மது அருந்தியது எல்லாம் வரலாறு சொல்லுகிறதே சர்ச்சையாக பேசினார். அவரின் இந்த பதில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆம், இது குறித்து தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கடும் கண்டனம்”. உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரன் ஆகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும், இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என்று பொதுவெளியில் பேசி, கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ள விஜய் ஆண்டனி, அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உறுப்பினர்களே, வணக்கம். நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன்.

ஒரு பத்திரிகை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவை பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது. என கூறி சர்ச்சைகளுக்கு முடிவுகட்டியுள்ளார்.