விழாவில் அவமானப்பட்ட விஜய் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார்..

Spread the love

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். பின்னர் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார், ஆனால் அந்தப் படம் மக்கள் மத்தியில் அவ்வளவு வரவேற்ப்பை பெறவில்லை என்பது நாம் எல்லோரும் அறிந்த விடையம்.

தனியார் இணையத்தள ஊடகத்தின் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகத்தை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர். பொதுவாக இந்த நிகழ்ச்சிக்கு வரும் பிரபலங்களை பவுன்சர்கள் விழா நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்வது வழக்கம். ஆனால் விருது விழாவிற்கு நெல்சன் வரும்போது பவுன்சர்கள் அவரை கண்டுக்காமல் விழா நடக்கும் இடத்தை காட்டிவிட்டு சென்றுவிட்டனர். நெல்சனை அவமானப்படுத்தும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நெல்சன் ஒரு இடத்தில் வந்தவேளை, அதேசமயம் அந்த இடத்திற்கு லோகேஷும் வந்து விட்டதால் இப்படி நடந்தது என்று விழா ஏற்பாட்டாளர் கூறி சமாதானப்படுத்த முயன்றுள்ளனராம். ஆனால் நெல்சன் அதனை ஏற்றகவில்லை என்று கொலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.