வோட்டு போடாமல் எஸ்கேப் ஆகும் தளபதி விஜய் ஏப்பிரல் 19 அன்று ரஷ்யாவில் படப்பிடிப்பு !

வோட்டு போடாமல் எஸ்கேப் ஆகும் தளபதி விஜய் ஏப்பிரல் 19 அன்று ரஷ்யாவில் படப்பிடிப்பு !

GOAT படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் முக்கிய படப்பிடிப்புகள் ரஷ்யாவில் இடம்பெற உள்ளதாம். இதனால் ஏப்பிரல் முதல்வாரமே விஜய் கிளம்பி ரஷ்யா செல்ல உள்ளார். இன் நிலையில் அவர் 19ம் திகதி நடக்க உள்ள, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய். முழு நேர அரசியலில் இறங்கியுள்ளார்.

இன் நிலையில் அவர் அரசியலுக்கு வந்து, முதல் முறையாக சந்திக்கும் இந்த தேர்தலில் எப்படி அவர் தனது வாக்கைப் போடாமல் எஸ்கேப் ஆக முடியும் என்று, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒரு அரசியல் கட்சித் தலைவரே இப்படிச் செய்யலாமா ? என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நெருக்கடி காரணமாக ரஷ்ய படப் பிடிப்பை ஏப்பிரல் 19க்கு பின்னர் தள்ளிவைப்பார்களா ? இல்லை ரஷ்யாவில் இருந்து வந்து விஜய் தனது வோட்டை போட்டு விட்டு பின்னர் திரும்பிச் செல்வாரா ? என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.