காலையில் எழுந்தால் கந்தர் ஷஷ்டி கவசம் பாடல் கேட்கிறதோ இல்லையோ, துணிவா இல்லை வாரிசா என்ற பிரச்சனை தான் TV வானொலியில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இன் நிலையில் தமிழ் நாட்டில் உள்ள 90 சத விகிதமான வினியோகஸ்தர்கள் அனைவரும் புறப்பட்டு, சென்னையில் உள்ள, உதயநிதி வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். துணிவு படம் போடப்படும் அதிகாலை 1 மணிக்கே விஜய் படமான, வாரிசையும் போடவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.
இதனால் உதயநிதி வீட்டில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பல வாக்குவாதம் நடந்தது. ஏன் ஒரு படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கீர்கள் என்று கேட்டு விஜய் பட வினியோகஸ்தர்கள் வாக்குவாதம் செய்தார்கள். இதனால் இறுதியாக 2 படங்களையும் அதிகாலை 1 மணிக்கு போடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை வரவேற்ற அவர்கள் கலைந்து சென்றார்கள். ஆனால்..
உதயநிதியை உடனே தொடர்பு கொண்ட தயாரிப்பாளர் போனி கபூர், எந்த சாட்டுப் போக்கும் சொல்லவே வேண்டாம் துணிவு மட்டும் தான் 1 மணிக்கு ஓடவேண்டும். விஜயின் படம் , 4 மணிக்கு தான் ஓடவேண்டும் என்று கடுமையாக கூறிவிட்டாராம். இதனால் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்ற மாதிரி, உதயநிதி 1 மணிக்கு அதுணிவு தான் ஓடும் என்று அறிவித்து, மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறார். இதில் வேறு ஒரு பிரச்சனையும் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜயின் புகழை கெடுக்க என, அஜித்தை பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு பேச்சு அடிபடுகிறது. அதாவது…
அஜித்தை பகடைக்காயாக வைத்து, விஜயை விழுத்த இவ்வாறு சிலர் செய்து வருவதாகவும், கோடிக் கணக்கில் பணத்தை கொடுத்து இந்த வேலைத் திட்டம் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.