மறுவெளியீட்டிற்கு தயாராகும் விஜய் – த்ரிஷா படம்..

மறுவெளியீட்டிற்கு தயாராகும் விஜய் – த்ரிஷா படம்..

விஜய் மற்றும் த்ரிஷா நடித்த ’லியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இருவரும் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படமான கில்லி திரைப்படம் விரைவில் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

மகேஷ் பாபு நடித்த தெலுங்கு திரைப்படமான ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் ஆன கில்லி திரைப்படம் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது

இந்த நிலையில் இந்த படம் வெளியாகிய 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் வரும் ஏப்ரலில் 17ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை 4கே தரத்தில் மாற்றும் பணியும் தற்போது நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஏற்கனவே பல படங்கள் கடந்த சில மாதங்களாக ரீ ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான கில்லி படமும் ரீ ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.