மனைவி, மகன், அம்மா…. குடும்பத்துடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!

மனைவி, மகன், அம்மா…. குடும்பத்துடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் இவர் விஜய் இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக பெயர் எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு நல்லதொரு இடத்தை பிடித்த விஜய் தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தில் தக்க வைத்துக்கொண்டார்.

இந்நிலையில் தற்போது தளபதி என விஜய் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

GOAT படத்தை தொடர்ந்து அடுத்ததாக அரசியலுக்கு இறங்கிவிட்டார். புதிய கட்சி ஆரம்பித்து அதற்கான வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். கடைசியாக ஒரே ஒரு படத்தின் நடித்துவிட்டு அத்துடன் சினிமாவிற்கு டாட்டா காட்ட முடிவெடுத்துள்ளாராம்.. அந்த வகையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ஒரு பக்கம் அட்லீ தான் தளபதி 69 படத்தை எடுக்கப் போகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், தாய் சோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.