ஏப்ரலில் ரிலீஸ்… “GOAT” படத்தின் அட்டகாசமான அப்டேட் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

ஏப்ரலில் ரிலீஸ்… “GOAT” படத்தின் அட்டகாசமான அப்டேட் சொன்ன அர்ச்சனா கல்பாத்தி!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “GOAT” எனும் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கேரளா என அடுத்தடுத்த இடங்களில் படு பிசியாக நடந்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அடுத்த இரண்டு வாரங்களுக்கு இடைவிடாமல் படத்தின் ஷூட்டிங் நடத்தவுள்ளனர்.

இதையடுத்து படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் அடுத்த மாதத்தில் நிறைவு செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வேற லெவல் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது வரும் ஏப்ரல் மாதத்தில் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி நிகழ்ச்சி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் தளபதிரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். எனவே ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அப்டேட்டுகள் வெளிவரும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.