விஜய்யின் அரசியல் கட்சி.. திருப்பதியில் ஜெயம் ரவி கூறிய பதில் இதுதான்..!

விஜய்யின் அரசியல் கட்சி.. திருப்பதியில் ஜெயம் ரவி கூறிய பதில் இதுதான்..!

நடிகர் ஜெயம் ரவி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நிலையில் அவரிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் கட்சி குறித்த கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ளார்.

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அவரது அரசியல் கட்சி குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ’சைரன்’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி கும்பிட இன்று சென்றார். ஏழுமலையானை தரிசித்து விட்டு அவர் வெளியே வந்த போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்ட நிலையில் அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி விஜய் அரசியல் கட்சி தொடர்புடைய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இது கோவில், இங்கு அரசியல் பேச வேண்டாம், அது மட்டுமின்றி என்னுடைய படத்தை பற்றிய கேள்வி மட்டும் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன், மற்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாது’ என்றும் அவர் கூறினார்.