அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கும் விஷ்ணு விஷால்!

கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களை இயக்கிய அருண் ராஜா காமராஜாவின் சமீபத்தைய வெப் சீரிஸான லேபிள் நல்ல வரவேற்பைப் பெற்றது.நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி கால நண்பரான அருண் ராஜா காமராஜா சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

மேலும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் பல படங்களில் அவரை நடிக்க வைத்துள்ளார். கனா படத்துக்கு பிறகு வெற்றி அவர் கார்த்தி மற்றும் ரஜினி ஆகியோருக்குக் கதை சொல்லி இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

அதன் பிறகு அவர் நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இப்போது அவர் விஷ்ணு விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.