இலங்கைக்கு செல்லும் பிரிதானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை!!!

இந்த செய்தியை பகிர

பிரிதானிய

இலங்கைக்கு செல்லும் பிரிதானிய சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானிய அரசினால் விசேட எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் நாள்தோறும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அதாவது பொருட்கள் சேவைகளின் தட்டுப்பாடு, அதிகரித்த விலையேற்றம் குறிப்பாக பெற்றோலிய பொருட்களின் தட்டுப்பாடு என்பன பாரிய பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக அங்கு கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளதாகவும், மற்றும் அரசுக்கு எதீராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமது நாட்டு பிரஜைகள் சுற்றுலா நிமிர்த்தம் இலங்கைக்கு செல்லும்போது மிக அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் athirvu.in இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.


இந்த செய்தியை பகிர