என்ன ஒரு என்ன ஒரு அழகியடா… நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

Spread the love

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் பூஜா ஹெக்டே. 2012 ல் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.

2014 ல் ஒக்க லைலா கோசம் படத்தில் தெலுங்கில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து முகுந்தா சாக்ஷியம், மகரிஷி, ஆலா வைகுந்தபுரம்லோ, உள்ளிட்ட பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். அதன் பிறகு தெலுங்கில் முன்னணி நடிகையாகப் பல வெற்றி படங்களை குவித்தார்.

தொடர்ந்து தெலுங்கு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த பூஜா ஹெக்டே. தமிழில் கடந்த ஆண்டு தளபதியுடன் பீஸ்ட் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றார். தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்டீவ்வாக இருக்கிறார். தற்போது பிங்க் நிற கோர்ட்டில் அசத்தலாகப் போட்டோஷுட் எடுத்துள்ளார்.