சிவகார்த்திகேயன் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது?

சிவகார்த்திகேயன் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் எப்போது?

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக கடந்த ஆண்டே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கடந்த மாதம் காஷ்மீரில் இதன் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்த படத்தின் கதை பற்றி வெளியான தகவலின் படி சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதனால் காஷ்மீரில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட இந்த படத்தின் ஷூட்டிங் அதிக நாட்கள் நடந்ததால் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பிப்ரவரி 17 ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. பிப்ரவரி 17 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் அன்று முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.