வணங்கான் படத்தில் இருந்து சூர்யா ஏன் விலகினார்?… தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்த பதில்!

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா ஏன் விலகினார்?… தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அளித்த பதில்!

பாலா இயக்கிய வணங்கான் திரைப்படத்தில் நடித்த் தயாரிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த சூர்யா ஒரு கட்டத்தில் விலகிவிட்டார். அதற்குக் காரணம் இயக்குனர் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.

இதையடுத்து இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இப்போது முக்கிய வேடத்தில் நடிக்க சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்போது வணங்கான் படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் சுரேஷ் காமாட்சி வணங்கான் படம் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “வணங்கான் படத்தில் இருந்து சூர்யா ஏன் விலகினார் என்று தெரியவில்லை. அவர் இப்போது வேறு ஒரு உயரத்தில் இருக்கிறார். ரசிகர்கள் அவரிடம் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள். அதனால் மீண்டும் பிதாமகன் படத்தில் வருவது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என நினைத்து விலகியிருக்கலாம். சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை.” எனக் கூறியுள்ளார்.