
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார். இந்த படத்திற்கு பிறகு அனிகாவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. மேலும் அஜித், நயன்தாரா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் இரண்டாவது முறையாக அஜித்தின் மகளாக நடித்தார் அனிகா.
இதுதவிர தமிழில் விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரமாகவும், மிருதனில் நடிகர் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்தார். இவர் தமிழில் கடைசியாக சீனு ராமாசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாமனிதன்’ படத்தில் நடித்தார். ரசிகர்களால் ‘குட்டி நயன்தாரா’ என புகழப்படும் அனிகா சுரேந்திரனின் புகைப்படங்களும் புதிய போட்டோ ஷூட்களும் எப்போதும் சோசியல் மீடியாவில் கலக்கி வருகின்றன.
இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவுக்கு தற்போது வயது 18 ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து தற்போது ஹீரோயினாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார் அனிகா. அந்த வகையில் அனிகா மலையாளத்தில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்துள்ள படம் ‘ஓ மை டார்லிங்’. இந்தப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அனிகாவின் லிப் லாக், மது அருந்துதல், படுக்கையறை காட்சிககள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
இவ்வாறு இருக்கையில் நடிகை அனிகாவிடம் முத்தக் காட்சி குறித்து இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாகவும் அதில் நடித்த போது சங்கடமாக இருந்ததா? எனவும் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதில் அளித்திருக்கும் அனிகா,.” நடிக்கும்போது அந்த அளவு வினோதமாக உணரவில்லை. ஆனால், அதன்பின்னர் அப்படி இருக்கிறது. மக்கள் இதனை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டது தான் வினோதமாக இருக்கிறது. இப்படத்தின் கதை சொன்னபோதே, இயக்குநர் கதையில் முத்தக் காட்சிகளின் முக்கியத்துவத்தையும் கூறினார். கதைக்குத் தேவைப்பட்டதால்தான் நடித்தேனே தவிர அதில் ஆபாசம் எதுவும் இருக்காது. படம் பார்க்கும்போது அது புரியும்” எனத் தெரிவித்திருந்தார். இது தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.



