என் மகனை ஹீரோவாக்கியது ஏன்?… இயக்குனர் முத்தையா அளித்த பதில்!

என் மகனை ஹீரோவாக்கியது ஏன்?… இயக்குனர் முத்தையா அளித்த பதில்!

விருமன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸாகி மிக மோசமான வசூலைதான் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்த இந்த திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக பிரிகிடா சகா மற்றும் தர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். முத்தையாவின் மற்ற படங்களைப் போலவே மதுரையைக் கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் பற்றி பேசியுள்ள முத்தையா “விருமன் படத்துக்குப் பிறகு வேறு ஒரு ஹீரோவை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தேன். ஆனால் அவருக்கு கையில் அடிபட்டுள்ளதால் ஷூட்டிங் தள்ளி போகிறது. அதற்குள் ஒரு படத்தை இயக்கிவிடலாம் என இந்த படத்தை ஆரம்பித்தோம். பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கியுள்ளேன். மதுரையில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.