பெண்களிடம் மட்டும் ஏன் அதை எதிர்பார்க்கிறீர்கள்? ரகுல் ப்ரீத் சிங்

பெண்களிடம் மட்டும் ஏன் அதை எதிர்பார்க்கிறீர்கள்? ரகுல் ப்ரீத் சிங்

கடந்த 2009 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான கில்லி மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவர் கெரடம், தடையறத் தக்க, வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ், துருவா, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, ரன்வே, டாக்டர் ஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தயாரிப்பாளர் ஜாக்கி பகனானி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருன்மணம் சமீபத்தில், கோவாயில் நடைபெற்றது. சீக்கிய மற்றும் இந்து முறைப்படி இரு குடும்பத்தினர் முன்னிலையில் சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில் பசுமைத் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் நமது சமூதாயத்தில் திருமணம் குறித்து பெரிய கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

நமது சமூதாயத்தில் திருமணம் குறித்து பெரிய கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். இதனை ஒருவரின் வாழ்வில் நடக்கும் மிக இயல்பான விஷயமாகத்தான் பார்க்க வேண்டும், திருமணத்திற்கு பின் ஆண்கள் இவ்வாறு உடையணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளதா? இல்லை தானே! அப்படியென்றால் பெண்களிடம் மட்டும் ஏன் அதை எதிர்பார்க்கிறீர்கள்? இப்போது காலம் மாறிவிட்டது. அவரவர்க்கு என்ன பிடிக்கிறதோ? அதைச் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.