உனக்கு எதுக்கு அரசியல்? விஜய்யை பார்த்து நறுக்குன்னு கேட்ட இயக்குனர்!

உனக்கு எதுக்கு அரசியல்? விஜய்யை பார்த்து நறுக்குன்னு கேட்ட இயக்குனர்!

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அரசியலில் குதித்துள்ளார். இதற்காக மும்முரமாக அரசியல் பணிகளை தந்து ரசிகர்கள் மன்றம் மற்றும் அதன் நிர்வாகிகளின் உதவியுடன் மேற்கொண்டு வருகிறார்.

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இதுவரை போட்டியிடாத தமிழக வெற்றி கழகம் 2026ஆம் ஆண்டு நடக்கும் தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலில் களம் காண்கிறது. விஜய்யின் அரசியல் பயணத்தை பலரும் ஆதரித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசியலில் விஜய் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சூழல் இப்படி இருக்க விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பிரபல இயக்குனர் பாரதிராஜா “உனக்கு எதுக்கு அரசியல்?” என பல வருடத்திற்கு முன்னர் கேட்டுள்ளார்.

ஆம், விஜய்யின் கத்தி படத்தின் பிரச்சனையின் போது இயக்குனர் பாரதிராஜாவின் விஜய்க்கு துணையாக இருந்துள்ளாராம். ரிலீஸ் ஆன பிறகு விஜய் பாரதிராஜாவின் வீட்டிற்கு சென்று நன்றி கூறியுள்ளார். அப்போது ‘விஜய் உனக்கு அரசியல் தேவையா’? என கேட்டாராம் பாரதிராஜா. இந்த தகவலை இயக்குனர் பாரதிராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.