ரஷ்யாவில் 155 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்: உக்ரைனா இல்லை ISIS ? தெளிவான விளக்கம் !

ரஷ்யாவில் 155 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்: உக்ரைனா இல்லை ISIS ? தெளிவான விளக்கம் !

ரஷ்யாவின் மொஸ்கோ நகரில், பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம். அதனால் மக்களே ஜாக்கிரதை என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தமது மக்களுக்கு, சரியாக 15 நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்தார்கள். இதனை அதிர்வு இணையம் 15 நாட்களுக்கு முன்னரே செய்தியாக பிரசுரித்தும் இருந்தது. இன் நிலையில் நேற்றைய தினம்(22) இரவு, மக்கள் அதிகம் கூடி, நிகழ்சி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தவேளை 4 துப்பாக்கிதாரிகள் சரமாரியாக சுட்டதில் 155 ரஷ்யர்கள் இறந்துள்ளதோடு, மேலும் 185 படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் உள்ளார்கள். இந்தச் சம்பவம் Crocus City Hall என்ற மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இது உக்ரைன் நடவடிக்கை என்றும், துப்பாக்கிதாரிகள் உக்ரைன் ஊடாக தப்பிச் செல்ல இருந்தார்கள் என்று அதிபர் புட்டின் முட்டாள் போல அறிவித்தார். ஆனால் சில மணி நேரத்தில் அவர் முகத்தில் கரியை பூசியுள்ளார்கள், ISIS தீவிரவாதிகள். ஆப்கான் நாட்டில் இயங்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாமே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளார்கள். திருடனுக்கு தேள் கோட்டியது போல, ஒரு பக்கம், உக்ரைன் விமானம் மூலம் ஊடுருவி ரஷ்யா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை சமாளிப்பதே பெரும் பாடாக உள்ள நிலையில் , போதாக்குறைக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளும் ரஷ்யாவை குறிவைத்துள்ளார்கள்.

ISIS ஏன் ரஷ்யாவை குறிவைக்க வேண்டும் ? பின்னணி என்ன ?

ஏதோ ஒரு தாக்குதல் ரஷ்யாவில் நடக்கப் போகிறது என்பதனை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் அந்த தகவலை ரஷ்யாவுக்கு கொடுக்க வில்லை. கொடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலையில் புட்டின் இல்லை. நிச்சயம் அதனை அசட்டை செய்து இருப்பார். இதனால் பட்டால் தான் தெரியும் , என்ற கருத்துடன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இருந்துவிட்டார்கள். இன் நிலையில் ஐ.எஸ் ஏன் ரஷ்யாவை தாக்கியது ? என்பது பலருக்கு எழும் சந்தேகமாக இருக்கும்.

ISIS-K என்று அறியப்படும் அமைப்பே ரஷ்ய தாக்குதலை நடத்தியுள்ளது. இது ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து பிரிந்த ஒரு இயக்கம். தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ளார்கள். சிரியா நாட்டில் ரஷ்ய படைகள் நிலைகொண்டுள்ளது. அவர்கள் அங்கே உள்ள ஐ.எஸ்(ISIL) அமைப்பு ஒன்றை குறிவைத்து, தாக்குதல் நடத்தி கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறார்கள். அந்த ஐ.எஸ் அமைப்பு, இந்த ISIS-K என்னும் அமைப்பின் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது. அதற்கு பழி வாங்கவே தற்போது இந்த ISIS-K அமைப்பு ரஷ்யா மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

4 துப்பாக்கிதாரிகளை தாம் கைதுசெய்துள்ளதாகவும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள். ரஷ்யாவில் அடைக்கலம் கொடுத்தவர்கள் அனைவரையும் நாம் பிடிப்போம் என்று புட்டின் கதறியுள்ளார். குறித்த மண்டபம் தீ பற்றிக் கொண்டது. இது எவ்வாறு நடந்தது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.