மீண்டும் அரசியலில் திமுக சார்பில் களமிறங்க விருப்பம்…. மு.க. அழகிரியின் அதிரடிப்பேச்சு!!!

இந்த செய்தியை பகிர

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியினை இன்று ஆரம்பித்து வைப்பதற்காக விமானம்மூலம் மதுரை வந்தார் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதன்போது டிவிஎஸ் நகரில் இருக்கும் தனது பெரியப்பாவான மு.க. அழகிரி வீட்டுக்குச் சென்ற ஸ்டாலினை மிகச் சிறப்பாக வரவேற்றார் அழகிரி அதனைத் தொடர்ந்து அழகிரியின் காலில் விழுந்து ஆசிபெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

பின்னர் இருவரும் மாறிமாறி பொன்னாடை போர்த்திக் கொண்டனர், இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அழகிரி எனது வீட்டுக்கு வந்த மகனை வரவேற்றது மிக மகிழ்ச்சியான தருணமாகும் எனத் தெரிவிதார். இதன்போது நீங்கள் எப்போது மீண்டும் அரசியலில் வருவீர்கள் எனச் செய்தியாளர் கேட்டதற்கு, அதற்கு நான் தயார் எனவும் ஆனால் இறுதி முடிவு தலைமைத்துவத்தின் கையில் தான் உள்ளதாகத் தெரிவித்தார்.


இந்த செய்தியை பகிர