குற்றச் செயல்களின் தலைநகரமாக மாறியுள்ள குரைடனில், கத்திக் குத்து, களவு, கற்பழிப்பு என்று பெரும் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் இடம்பெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில், 20 வயதுடைய பெண்ணை ஒரு நபர் இழுத்துச் சென்று, ரவுண்ட பவுட்(வட்ட வளைவில்) உள்ள பற்றையில் வைத்து கற்பழித்துள்ளார். பட்டப் பகலில் நடந்த இந்தச் சம்வத்தால் குரைடன் நகரமே ஆடிப்போயுள்ளது. இதுபோக..
பொலிசார் தனிப்படை ஒன்றை அமைத்து, குறித்த நபரை தேடி வருகிறார்கள். இதுவரை எவரும் கைதாகவில்லை என்று குரைடன் பொலிசார் சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள். இதேவேளை பாதிக்கபப்ட்ட பெண்ணுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. குறித்த பெண் ஒரு ஆசிய இனத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.